ழை மாணவர்களுக்கு உதவுவதற்காக போர்ட்டர் மற்றும் அழைப்புப் பேராசிரியர் பணியின் மூலம் வரும் பணத்தை ஒருவர் பயன்படுத்தி வருகிறார் என்றால் உங்க ளால் நம்பமுடிகிறதா? ஒரியா மாநிலம் கஞ்சம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் நாகேசு பத்ரோ. இவர் வசதிகுறைந்த மாணவர் களுக்குக் கற்பிப்பதற்காக பகலில் தனியார் கல்லூரியில் அழைப்புப் பேராசிரியராகவும், இரவில் போர்ட்டராகவும் வேலை பார்த்து, அதிலிருந்து வரும் பணத்தைப் பயன்படுத்துகிறார். 2011 முதல் போர்ட்டராக வேலைபார்த்து வரும் நாகேசு, கொரோனா காலகட்டத்தில் சரிவர ரயில்கள் இயங்காததால் வருமானமில்லாத நிலையை அடைந்தார். ஆடு வளர்க்கும் தொழிலாளியின் மகனான நாகேசு, தனது பள்ளிப் படிப்பையும் பட்டப் படிப்பையும் முடிக்க பட்ட சிரமங்களே, ஏழை மாணவர்களுக்கு உதவவேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியதாம். மாலை நேர வகுப்புகளில் இவர், இன்னும் இரு ஆசிரியர்களையும் நியமித்து ஏழை மாணவர்களுக்கு இலவசமாகக் கற்பித்து வருகிறார். பெரிய மனசுக்காரர்!

க்ரைனுக்கும் ரஷ்யாவுக்குமான போரில் ரஷ்யாவுக்கு லாபமா- நட்டமா என உறுதியாகத் தெரியவில்லை. ஆனால், அமெரிக்காவும் ரஷ்யாவும் சமீபத்தில் கைதிகளை மாற்றிக்கொண்டதில் ரஷ்யாவுக்கு நிச்சயம் லாபம்தான். மாஸ்கோவுக்கு வந்திருந்த அமெரிக்க கூடைப் பந்து வீராங்கனை பிரிட்னி கிரைனர், கஞ்சா எண்ணெய் வைத்திருந்த தாகக் கூறி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படட்டார். இதை யடுத்து அவரை விடுவிக்கவேண்டுமென அமெரிக்காவில் பைடனுக்கு நெருக்கடி எழுந்தது. ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை தொடங்கப்பட்ட நிலையில், ஆயுத வியாபாரி விக்டர் பவுட்டை பதிலுக்கு விடுதலை செய்யக் கோரியது ரஷ்யா. மரண வியாபாரி என்ற அடைமொழியுடன் 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையிலிருக்கும் விக்டரை விடுவிக்கலாமா என அமெரிக்கா தடுமாறியது. இறுதியில் பிரிட்னிக்காக இறங்கிவருவது என அமெரிக்கா முடிவு செய்தது. ஆறுமாத பேச்சுவார்த்தைக்குப் பின் அரபு அமீரக அபுதாபி விமான நிலையத்தில் வைத்து இரு நாடுகளும் கைதிகளை பரிமாறிக் கொள்ள பிரிட்னி அமெரிக்காவையும், விக்டர் ரஷ்யாவையும் சென்றடைந்தனர். வீராங்கனைக்கு ஈடாக, ஆயுத வியாபாரியை திரும்பப் பெற்றதில் ரஷ்யாவுக்கு லாபம் தான் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். இதுதான் பண்ட மாற்றா!

ff

Advertisment

புகைப் பழக்கம் புற்றுநோய்க்கு மிக முக்கியமான காரணமாக இருந்துவருகிறது. இந்தியாவில் புகைப் பழக்கத்துக்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை அதிகம். திரை நாயகர்கள், படத்தில் சிகரெட் குடிப்பது சிகரெட் பழக்கத்தை ஊக்குவிப்பதால் அவர்கள் படங் களில் மது, புகை குடிக்கும் காட்சிகளில் உடல்நலத்துக் குத் தீங்கு என்ற அறிவிப்பு வெளியிடவேண்டும் என்ற நடைமுறை உள்ளது. இந்நிலையில், சிகரெட் பழக்கத்தைக் குறைக்கும் நோக்கில் நாடாளுமன்ற நிலைக்குழு, சில்லறையில் சிகரெட் விற்பனையை நிறுத்தும்படி அரசுக்குப் பரிந்துரைத்துள்ளது. விற்பனையும் லாபமும் கோடிக்கணக்கில் இருக்கும் சிகரெட் நிறுவனங்களின் லாபி, இந்தத் தடை யோச னையை அமலாக்க விடுமா? சில்லறை தேத்துறதுக் கான பரிந்துரையா முடிஞ்சுடக்கூடாது.

மேற்கு வங்காளத்தின் பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ளது ஹசன்பாத். கடலோரக் கிராமமான இங்கு 2020, மே 21-ல் ஆம்பன் எனும் புயல் கடந்துபோனது. அப்போது கிராமத்தின் பெரும் பகுதி மரங்களைச் சாய்த்துவிட்டுச் சென்றுவிட்டது. அலையாத்தி வகையிலான மரங்கள் சரிந்ததால், கடல்நீர் நிலத்தடி நீரில் கலந்து அதன்பின் இங்குள்ள நீர் குடிக்கத் தரமில்லாததாகிவிட்டது. குடிக்க மட்டுமில்லை... விவசாயத்துக்கும் பயன்படவில்லை. இப்பகுதியிலுள்ள நிலத்தடி நீரில் உப்புத்தன்மை அலகு 5 ஆக இருக்கிறது. இது ஜீரோவாக இருக் கும் தண்ணீரைத்தான் குடிக்கமுடியும். இதனால் இந்தக் கிராமத்தின் ஒவ்வொரு குடும்பமும் சுத்தி கரிக்கப்பட்ட குடிநீரை விலைகொடுத்து வாங்கி வருகின்றனர். சராசரியாக மாதம் 1500 ரூபாய் ஆவதால், குடிநீர்ப் பிரச்சினைக்கு முதல்வர் மம்தா தீர்வு வழங்க வேண்டுமென கோரிக்கை வைத்திருக்கின்றனர். சென்னையிலும் அலை யாத்திக் காடுகளும், கடல் நீர் உட்புகுவதைத் தடுக்கும் சதுப்புநிலப் பகுதிகளும் இருக்கின்றன. அதைப் பாதுகாக்காவிட்டால், ஹசனாபாத்தின் கதிதான் சென்னை மக்களுக்கும். வரும்முன் காப்பது நல்லது!

சிறை வளாக கண்காணிப்புக் கேமரா வுடன், சிறைக் காவலர்கள் உடையில் கேமரா பொருத்தி கண்காணிக்கவும் திட்டமிட்டுள் ளது சிறைத்துறை. தமிழகத்தில் மத்திய, மாவட்ட, கிளைச் சிறைகள் என மொத்தம் 142 சிறைகள் உள்ளன. இவர்கள், இந்த சிறை வளாகங்களில் உள்ள கண்காணிப்புக் கேமராவால் கண்காணிக்கப்படுகின்றனர். இருந் தாலும் இவை சிறையில் நடக்கும் முழுமையான நிகழ்வுகளைத் தருவதில்லை. இதனால் தமிழக சிறைகளில், சிறைக் காவலர்கள் உடையிலேயே கேமராவைப் பொருத்திக் கண்காணிக்கும் நவீன முறையை அறிமுகப்படுத்த முடிவெடுக் கப்பட்டுள்ளது. இதற்காக சிறைத்துறை டி.ஜி.பி. அம்ரேஜ் பூஜாரி முதல்கட்டமாக, உடையில் அணியும் 50 கேமராக்களுக்கும், அதற்கான சர்வர்களை நிறுவுவதற்கும் ரூ.46 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். இந்த கேமராவில் பதிவாகும் காட்சிகளை சிறைக் கட்டுப்பாட்டு அறை, சென்னை எழும்பூரிலுள்ள சிறைத்துறை தலைமை அலுவலகக் கட்டுப்பாட்டு அறையிலும் காணமுடியும். தொழில்நுட்பம் எதையெல்லாம் சாத்தியமாக்குது!

-நாடோடி